அமைச்சர் ரவி கருணாநாயக்க சம்பந்தமாக இரு தினங்களில் விசாரணை நடத்திய சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இரண்டு வருடங்களாக கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்தை உறுதிப்படுத்த முடியாது போயுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம ஆனந்த லெனரோல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சிலுவையில் அறைய சட்டமா அதிபர் திணைக்களம், அலோசியஸின் தொலைபேசி சம்பந்தமான 8 ஆயிரத்து 600 பக்கங்களை கொண்ட விசாரணையை இரு தினங்களில் மேற்கொண்டுள்ளது.
எனினும் கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்தை உறுதிப்படுத்த இரண்டு வருடங்கள் சென்றுள்ளதால், சட்டமா அதிபர் திணைக்களம் மீதான மக்களின் நம்பிக்கை பழுதுப்பட்டுள்ளது.
அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசியை சீ.ஐ.டியிடம் ஒப்படைக்குமாறு கடந்த ஜூலை 24 ஆம் திகதி உத்தரவிடப்பட்டது. 25 ஆம் திகதி தொலைபேசி கையளிக்கப்பட்டது.
26 மற்றும் 27 ஆம் திகதிகள் விடுமுறை திகதிகள். 8 ஆயிரத்து 600 பிரதிகளை எடுக்க சீ.ஐடிக்கு இரண்டு நாட்கள் செல்லும். 2 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை பரிசோதித்த பின்னர் ஆணைக்குழுவில் முன்வைத்தது.
எனினும் கோத்தபாய ராஜபக்ச தமது பெற்றோரின் மயானத்தை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் 9 கோடி ரூபாவை பெற்றுக்கொடுக்க எழுதிய கடித்தில் உள்ள கையெழுத்தை உறுதிப்படுத்த இரண்டு ஆண்டுக்கும் மேலான காலத்தை சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துக்கொண்டுள்ளது.
ராஜபக்சவினரின் மயானத்தை நிர்மாணிக்க வேறு எவராவது கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்தை களவாக பயன்படுத்துவார்களா?
இந்த கையெழுத்து கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்தா இல்லை என்பதை இன்னும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கேலிக்குரியது எனவும் பத்தேகம ஆனந்த லெனரோல் குறிப்பிட்டுள்ளார்.