தேவையான பொருட்கள் :
பொரி – 2 கப்
ஓமப்பொடி – 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை – 6
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
உருளைக்கிழங்கு – 2
புதினா/கொத்தமல்லி சட்னி – தேவையான அளவு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
தட்டு வடையை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, உடைத்த தட்டுவடை சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, புதினா/கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகப் பொடி என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி!!!
மாலை நேரத்தில் சாப்பிட அருமையான சாட் ஸ்நாக்ஸ் ரெடி.