உணவாக பயன்படும் பீட்ரூட்டில் பல்வேறு சத்துக்கள் உள்ளதை போல அதன் இலையிலும் அதிகமாக சத்துக்கள் நிறைந்துள்ளது.
பீட்ரூட் இலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
பீட்ரூட் இலை, நல்லெண்ணெய், கடுகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, வெங்காயம் ஆகிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதனுடன் நறுக்கிய பீட்ரூட் இலை மற்றும் உப்பு, நீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இந்த பீட்ரூட் இலை பொறியலை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை குணமாகுவதுடன், கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பீட்ரூட் இலையின் நன்மைகள்?
பீட்ரூட், மிளகு, சீரகம், மஞ்சள் ஆகியவை கலந்த பானத்தைக் குடித்து வந்தால், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறைவதுடன், நரம்பு நோய்கள் தடுக்கப்படும்.
நெல்லி வற்றலை 2 மணிநேரம் ஊறவைத்து, அதனுடன் பீட்ரூட் இலை, கறிவேப்பிலை சேர்த்து பசையாக அரைத்து, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், முடி உதிர்வு ஏற்படாது.
ரத்த ஓட்டத்தை சீர் செய்து, இதய அடைப்பு வராமல் தடுக்கிறது.
பீட்ரூட் இலையின் பொறியலை வாரம் பல முறை செய்து சாப்பிட்டு வந்தால், அழகு, ஆரோக்கியம் இரண்டுமே மேம்படும்.