வித்யா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் தாம் சுய வாக்குமூலமொன்றை வழங்க வேண்டும் என பிரதி பொலிஸ்மா அதிபர் கமகே குமாரலால் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்ட போது, யாழ்ப்பாணத்தில் பிரதி பொலிஸ்மா அதிபராக அவர் கடமையாற்றியுள்ளார்.
அவருக்கு உயரதியாரியாக கடமையாற்றியவர், சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க.
இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது முன்னிலையாகிய பிரதி பொலிஸ்மா அதிபர் கமகே குமாரலால், தமக்கு கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.