வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் வலியுறுத்துவார்கள் என அறியமுடிகின்றது.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தமது தீர்மானத்தை நாளையதினம் அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரசாங்கத்தின் நலன்கருதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க விவகாரம் முக்கிய பேசுபொருளாக அமையவுள்ளது.
இதன்போது அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று நேரில் வலியுறுத்தப்படும் என அரசியல் வட்டாரங்களினூடாக அறியமுடிகின்றது.