‘விக்ரம் வேதா’ படத்தின் வெளியீட்டின் போது சில பிரச்சினைகள் இருந்தாலும், படம் வெளிவந்து வரலாறு படைத்திருப்பதாக மாதவன் கூறினார்.
இது குறித்து மாதவன் கருத்து தெரிவித்த போது, “பட வெளியீட்டு திகதியை தள்ளி வைக்கலாம் என்ற பேச்சு வந்தது. ஏனென்றால் அப்போதுதான் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எல்லாம் நன்மைக்கே. படம் ஜூலை 21 அன்று வெளியாகி கடவுள் அருளால் வரலாறு படைத்தது. எனவே, நடக்கும் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன்” என்றார்.
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வடலட்சுமி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் இதுவரை ரூ.50 கோடியை வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மாதவன் அடுத்து, இந்தியில், ‘சந்தாமாமா தூர் கே’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.