லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் ரூ.400 கோடிக்கு உருவாகி வரும் `2.0′ படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. படத்தின் புரமோஷனுக்காக படக்குழு உலக சுற்றுலா ஒன்றையும் நடத்தி வருகிறது.
`2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் பிறந்தநாளான வருகிற டிசம்பர் 12-ஆம் பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், `2.0′ படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு விநியோக உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் அதிக பொருட்செலவில் வாங்கியிருப்பதாக லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இது ஒரு வரலாறு படைக்கும் கூட்டணி என்றும் அவர் கூறியிருக்கிறார்.