தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.
காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம்.
வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.
உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.
கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும்.
தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.
படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.