வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஊவா வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரசேங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடுமையான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்துக்கும் அதிக பேரினால் பதிவாகியுள்ளது.