நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அந்த நேரத்தில் பதிலளிப்பதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீடாதிபதியை இன்று முற்பகல் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கியதன் பின்னர் மஹாநாயக்க தேரரை சந்தித்ததாகவும், நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக 48 மணித்தியாலங்களுக்குள் நடவடிக்கை எடுக்க முடியுமாயின், தயவுசெய்து ஏனையவை தொடர்பிலும் அவ்வாறு செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியையும், பிரதமரையும் அரசாங்கத்தையும் பாதுகாப்பதே தமது தேவையாக இருந்ததாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்னாள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
இது தொடர்பில் கட்சியினருடன் இணைந்து அந்த நேரத்தில் பதிலளிப்பதாக தெரிவித்த அவர், இது போன்ற சந்தர்ப்பத்தில் அதை பற்றி குறிப்பிட தமக்கு தார்மீக உரிமை இல்லை என்றும் ரவி கருணாநாயக்க கூறினார்.