சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகள் பூர்த்தியாகி சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தொடர்ந்தும் கால தாமதம் ஏற்பட்டு வருவது குறித்து பிரதமர், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மிகுந்த அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாகவும், பிணை முறி மோசடி விவகாரத்தில் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளதாகவும் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் அண்மையில் பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.