அவுஸ்ரேலியாவிலும் நியூசிலாந்திலும் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளமையால் தான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை என அவுஸ்ரேலிய துணை பிரதமர் பர்னாபி ஜோய்ஸ் (Barnaby Joyce) தெரிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பானது ஆளும் கன்சர்வேடிவ் ஆட்சியை நிலைகுலைய செய்யும் அளவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜோய்ஸ் பதவியிலிருந்து நீங்கினால் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் அபாயம் நேரிடும் என அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் பிறந்த ஜோய்ஸ், நியூசிலாந்தின் வம்சாவளியாக இருக்கலாம் என நியூசிலாந்து அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
ஜோய்ஸின் தாயார் அவுஸ்ரேலிய பிரஜையாவார். தந்தை நியூசிலாந்தில் பிறந்தவர். இவர்கள் கடந்த 1947ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ளனர்