மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்வார்கள்.மனைவி மட்டுமல்ல கணவர் அமைவதும் கடவுள் கொடுத்த வரமே. சில பெண்களுக்கு கணவர் வரம் . சில பெண்களுக்கு கணவர் சாபம்.
பெரும்பாலும் எந்த ஒரு ஆணும் தனது மனைவி வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தான் நினைப்பான்.மனைவி வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதற்காக கணவன் தனது மனைவியை ஊக்கப்படுத்துவது தான் வழக்கம்.ஆனால் தனது மனைவி பட்டப்படிப்பு படித்ததால் பொறாமையடைந்த கணவர் ஒருவர் தனது மனனவியின் கை விரல்களை வெட்டிய கொடூர சம்பவம் ஒன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷை சேர்ந்த 30 வயதான ரிஃக்குள் இஸ்லாம் என்னும் நபரின் மனைவியான 21 வயதுடைய ஹவா அஹ்க்டெர் என்பவர் பல்கலைக்கழகம் ஒன்றில் இளமானி பட்டப்படிப்பை படித்து வந்துள்ளார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரிஃக்குள் இஸ்லாம் தனது மனனவி பட்டம் படிப்பதனால் பொறாமைக்கு உள்ளானார். எப்படியாவது மனைவியின் படிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்த ரிஃக்குள் இஸ்லாம் பலவேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் மனைவி கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து உற்சாகத்துடன் தனது படிப்பை தொடர்ந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பொறாமைபிடித்த கணவன் ஒரு நாள் மனைவியின் அருகே சென்று , உன்னுடைய கண்களை மூடு உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கின்றது என்று கூறியுள்ளார். கணவனின் பேச்சை நம்பிய மனைவியும் தனது கைகளால் தனது கண்களை பொத்தியுள்ளார். மனைவி கண்களை பொத்திய சமயம் கணவன் தனது மனைவியின் வாயினை துணியினால் கட்டி விட்டு கை விரல்களை கத்தியால் அறுத்து எறிந்துள்ளார்.
கணவனின் இந்த கொடூரமான செயலால் தனது வலது கை விரல்களை முழுமையாக இழந்த மனைவி தற்போது இடது கையினால் எழுத பழகி வருகின்றாராம். மனைவியின் கை விரல்களை துண்டித்த கணவன் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகின்றார்.