கொழும்பு நாரஹேன்பிட்டி – ஹிங் எல பிரதேசத்திலுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் வீட்டிற்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் பீல்ட் மார்ஷல் பொன்சேகா வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் அவரை புகைப்படம் எடுத்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நுவரெலியா மாவட்டம் லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு சென்றுகொண்டிருந்த போது புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வீட்டிலிருந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நாவல பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் தொழில் புரிந்து வருபவர்கள் என்று கூறப்படுகின்றது.