பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர் சினேகன். பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் பிரச்சனை என்றாலும் உடனடியாக அவர்களிடம் சென்று பிரச்சனையை தீர்த்து வைப்பார்.
பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களும் சினேகன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர். இப்படி இருக்கும் சினேகனின் சொந்த ஊர் எது, அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பிக்பாஸ் கூட சமீபத்தில் சினேகனின் உறவினர்களை தொடர்பு கொண்ட போது, அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருக்கும் செங்கிப்பட்டிதானி பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள புதுக்கரியப்பட்டி கிராமம் தான் சினேகனின் ஊர்.
சினேகனை அங்கிருப்பவர்கள் செல்வம் என்று தான் அழைப்பார்களாம். அவருக்கு நான்கு அண்ணன் மற்றும் ஒரு அக்கா.
சினேகனுக்கு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். இதனால் அவர் நான்கு வீடுகள் ஒரே இடத்தில், சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் முள்வேலியோடு அமைத்து கொடுத்துள்ளார்.
அந்த வீடுகள் எப்போது தனது நான்கு அண்ணன்களுக்குத் தான் என்று சொல்லிய கட்டியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு ஓட்டு வீட்டில் இருந்ததாகவும், அண்ணன்களுக்கு கல்யாணம் ஆகியும் கூட்டுக்குடும்பமா இருந்ததால் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதால் புது வீடு கட்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சினேகனுக்கு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசை.
ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் தோட்டம் அமைத்து, இயற்கையோடு வாழ்வதுதான் சினேகன் அபிப்பிராயம். அம்மா என்றால் சினேகனுக்கு அளவிற்கு மீறிய அன்பாம், ஏனெனில் அவர் தான் கடைசி பையன்.
மேலும் சினேகனின் பழைய ஓட்டு வீடு கதவுகள் மூடப்பட்ட நிலையில் அப்படியே பாழடைந்து கிடக்கிறது. ஆனால் அந்த வீட்டில் அவர், ஜெயலலிதாவிடம் வாங்கிய விருது மட்டும் சுவரில் மாட்டப்பட்டு, கழற்றப்படாமல் இருந்துள்ளது. சினேகன் இந்த வீட்டில் தான் வளர்ந்துள்ளார், அவரின் அம்மாவும் இங்கே தான் மறைந்துள்ளார்.