தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது தமிழகத்தில் ஹாட் டாபிக் ஆக உள்ளது.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிவகார்த்திகேயன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம், வேலைக்காரன். இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை அத்தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான், பிக் பாஸ் வீட்டிற்குள் சிவா செல்லயிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் புரோ கபடி லீக் போட்டியின் புரொமோஷனுக்காக தமிழ் தலைவாஸ் அணி பிக் பாஸ் வீட்டிற்குள்ளே சென்று வந்தார்கள்.
அதேபோலத் தான் வேலைக்காரனுக்காக சிவா செல்வதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளரான கமலும், நேற்று பிக் பாஸ் வீட்டில் புது வரவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். இதனால் சிவா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.