மாவனெல்லவில் காதலன் ஒருவர் தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர் தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான சந்தேக நபர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி 15 வயதில் இருந்தே காதலில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், பின்னர் காதலன் வெளிநாடு சென்ற போதிலும் தொடர்ந்தும் காதலித்து வந்துள்ளார்.
எனினும் இருவருக்கும், இவருவரது குடும்பங்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த காதலன் காதலியின் வீட்டுக்கு சென்று காதலியை கொலை செய்துள்ளார்.
சந்தேக நபரான காதலன், நாமல்கம – தீவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள யுவதியின் சடலம் கேகாலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..