நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் கொண்டாடிய அரசு ஊழியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன் அவரின் சம்பள உயர்வும் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் செயல்படும் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் ஜெயந்தி.
இவர் கடந்த மே 1ஆம் திகதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை தனது அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
சில ஊழியர்கள் ஜெயந்தியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களில் ஒருவர் இதை வீடியோ எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.
இதையடுத்து ஜெயந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த தான் செய்ததை ஜெயந்தி ஒப்பு கொண்டார்.
இதற்கு தண்டனையாக ஜெயந்தி வேறு பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு ஓராண்டுக்கு சம்பள உயர்வும் நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலகத்தில் இதுபோன்ற தவறுகள் இனி நடக்கக்கூடாது என எச்சரிக்கவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜெயந்தி கூறுகையில், ஒரு பெண்ணாக பணியிடத்தில் பல சவால்களை சந்தித்தாலும் சிறப்பாக பணியாற்றி வந்தேன், பிறந்தநாள் கொண்டாட்டத்தால் வேலை மீதான தனது அர்ப்பணிப்பு குறையவில்லை என கூறியுள்ளார்.