மலையாள திரையுலகில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நடிகை, கேரள முதல்வருக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், நான் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் என்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது.
தினம் தினம் இந்த சம்பவத்தை நினைத்து நொந்துகொண்டிருக்கிறேன், ஆனால் இப்படி இருந்தால் என்னால் எதனையும் எதிர்த்து போராட முடியாது,
தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.
ஆனால், பூன்ஜார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிசி ஜார்ஜ், என்னைப்பற்றி மிகவும் தவறாக பேசி வருகிறார், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மறுநாளே எப்படி இவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிகிறது என கூறிவருகிறார்.
ஆனால், நான் 10 நாட்களுக்கு பின்னர்தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன், நடிப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பிதான் எனது குடும்பம் உள்ளது, எனக்கு நடந்த இந்த கொடூரத்திற்கு நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என ஜார்ஜ் எதிர்பார்க்கிறேன் என கருதுகிறேன்.
இந்த சம்பவத்தால் எனது குடும்பம் படும் வேதனையை வார்த்தையால் விவரிக்க இயலாது. இப்படி ஒரு கடிதத்தை எழுதவேண்டிய நிலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார். இந்த கடிதத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.