அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் பிருந்தாவனம். இப்படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், அருள்நிதி, தற்போது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் அந்த படத்தை ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. இரவின் மறுபக்கம் எப்படியிருக்கும் என்பதை விளக்கும் படமாக ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விப்பது மட்டுமின்றி, சிந்திக்கவும் வைக்கும் வகையில் படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் கரு.பழனியப்பன். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகவும் இருக்கும் கரு.பழனியப்பன் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி விட்டார்.
தற்போதைய அரசியலை அலசும் படமாக அந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தையும் தயாரித்த ‘ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரிக்கவுள்ளார்.