ஸ்ரீலங்காவின் வென்னப்புவ என்ற பிரதேசத்தில் தனது மாமனாரால் குத்திக் காயப்படுத்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தனது கணவரின் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவருடன் அந்தப் பெண்ணின் மாமனார் (கணவனின் தந்தை) தவறான நோக்கத்துடன் அணுகியுள்ளார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த குறித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு அவர் முயன்றுள்ளார்.
மாமனாரின் இந்த அருவருக்கத்தக்க செயலை எதிர்த்து கடுமையாகப் போராடியபோது ஆத்திரமடைந்த மாமனார் கத்தி ஒன்றினால் குறித்த பெண்ணைக் குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.