மாலபே நெவில் பர்னாண்டோ வைத்தியசாலையை எந்தவித ஒப்பந்தமும் இன்றி அரசுடைமையாக்கியதன் மூலம் அரச பணத்தை வீணடிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது ஊழல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச வைத்தியர்கள் சங்கத்தினால் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குறித்த முறைப்பாட்டு பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.
மாதம் 20 கோடி ரூபாய் அரசாங்கத்தினது பணம் வீணடிக்கப்படுவதாகவும் அதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்னவே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் வைத்தியர் சங்க செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
ஊழல் சட்டங்களுக்கு அமைவாகவே அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அமைச்சர் ராஜிதவை உடனடியாக கைது செய்து விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அரச வைத்தியர்கள் சங்க செயலாளர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.