Loading...
யாழ். குடாநாட்டில் தேங்காய் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 55 ரூபா முதல் 60 ரூபா முதல் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் இன்றைய தினம் (16) 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Loading...
இதேவேளை, 40 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நடுத்தரத் தேங்காய் 50 ரூபாவாகவும், 30 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சிறிய தேங்காய் 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
யாழ். குடாநாட்டிலிருந்து பெருமளவு தேங்காய்கள் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றுமதியாகின்றமையாலும், கடந்த சில தினங்களாக யாழில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாகவும் குடாநாட்டுச் சந்தைகளில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...