Loading...
தேங்காயில் இருந்து கிடைக்கும் நாரைக் கொண்டு பல்வேறு வணிகப் பொருட்களை தயாரிக்கலாம்.
தேங்காய் நார் இயற்கையானது என்பதால், இதன் மூலம் உருவாக்கப்படும் பொருட்களில் பெரும்பாலும் வலிமை வாய்ந்ததாக இருக்கும்.
Loading...
தேங்காய் நார் மறுசுழற்சி சுத்திகரிப்பு திறன் கொண்டது, 100% மறுசுழற்சி செய்யப்பட்ட தேங்காய் நார் மிக நீண்ட நீளம் வரை கிடைக்கும், இது பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
தேங்காயின் வெளிப்புற ஓட்டில் இருந்து பல்வேறு வகையான தேங்காய் நார்கள் எடுக்கப்படுகிறது. அவை,
- பழுப்பு இழை (பிரவுன் ஃபைபர்)
- வெள்ளை இழை (வைட் ஃபைபர்)
- பிரிஸ்டல் நார் (பிரிஸ்டல் காயர்)
- பஃபரிங் நார் (பஃபரிங் காயர்) இவை அனைத்தும் பல்வேறு நார் சார்ந்த பொருட்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் நாரை வைத்து என்னனென்ன செய்யலாம்?
- தேங்காய் நார் கயிறு உற்பத்தி செய்வதற்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
- மீன் வடிகட்டிகள், தரையில் போடும் கம்பளங்கள், பாய்கள், தூரிகைகள், படுக்கை விரிப்புகள், கரி மற்றும் இருக்கை கவர்கள் போன்ற பல வகையான உற்பத்திக்கு ஏற்றுமதி செய்வதற்காக தேங்காய் நார் பெரிதளவில் உதவுகிறது.
- நம் வீட்டு தொட்டியில் வளர்க்கப்படும் தாவரங்களின் வளர்ச்சியை அதிகரிக்க மணலால் நிரப்பப்பட்ட தொட்டியில் தேங்காய் நார்களை புதைத்து, அதில் தாவரத்தை ஊன்றி தண்ணீர் ஊற்றி வந்தால் தாவரத்தின் வளர்ச்சியை செழிப்பாக்க உதவுகிறது.
Loading...