Loading...
100 கிராம் பப்பாளியில் 43 கலோரிகள், விட்டமின் C, ஃபோலேட் 10 % , ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை கொண்ட பப்பாளி பழத்தை சிலர் மட்டும் சாப்பிடக் கூடாது.
Loading...
பப்பாளியை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
- கர்ப்பிணிகள் பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக் கூடாது, ஏனெனில் பச்சை பப்பாளியில் லாடெக்ஸ் எனும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளது, இது கருச்சிதைவை உண்டாக்கும்.
- பப்பாளியில் உள்ள பாப்பைன் எனும் நொதிப் பொருள், சுவாச பிரச்சனைகளை தீவிரமாக்கும். எனவே ஆஸ்துமா உள்ளவர்கள், பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது.
- விட்டமின் C பப்பாளியில் ஏராளமான அளவில் உள்ளது. இது நம் உடலில் அளவுக்கு அதிகமானால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை குறைந்து, சிறுநீரக கற்களை உருவாக்கும்.
- ஆண்கள் பப்பாளியை அதிகளவில் உட்கொண்டால், ஆண்களுக்கு வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைத்து, கருவளத்தை பாதிக்கும்.
- பப்பாளியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் பப்பாளியில் உள்ள பாப்பைன் அதிகளவு வயிற்றினுள் சென்றால், வயிற்று உப்பிசம் பிரச்சனையை உண்டாக்கும்.
- தினமும் அதிக அளவு பப்பாளியை சாப்பிட்டால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின் நம் உடலில் அதிகம் சேர்வதால், வெளிரிய மஞ்சள் நிறம் நம் உள்ளங்கையில் ஏற்படும். அது கரோட்டினீமியா எனும் சரும நோயாகும்.
- குறைவான ரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிட்டால், மிகவும் ஆபத்தாகும்.
Loading...