தண்ணீர் அருந்துவது உடலுக்கு எவ்வளவு நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே அளவுக்கு சுத்தமான தண்ணீரை அருந்த வேண்டும் என்பது முக்கியம். நாம் அனைவரும் தினசரி தேவைகளுக்காக தண்ணீரை சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம்.
ஒரு மனிதனுக்கு தினசரி 3.8 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் 45.6 லிட்டர் நீர் அல்லது அதற்கு மேற்பட்ட நீரை நீங்கள் ஒரு நாளைக்காக சேமித்து வைக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு நாம் தினசரி சேமித்து வைக்கும் தண்ணீரை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் சேமிக்க வேண்டியது அவசியம்.
1. நீங்கள் நிறைய தண்ணீரை சேமித்து வைக்க விரும்பினால், காப்பர் அல்லது சில்வர் பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம். இதனால் தண்ணீரின் தன்மை மாறாது. காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் அருந்துவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
2. தினசரி தேவைகளுக்காக தண்ணீரை புட் கிரேடு பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் பாட்டில்களில் சேமித்து வைக்கலாம். சாதாரண பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்க கூடாது.
3. ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த பிளாஸ்டிக் பிபீஎ ப்ரீ (BPA free) பாட்டிலாக உள்ளதா என்பதையும், தண்ணீரை சேமித்து வைப்பதற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டதா என்பதையும் உறுதி செய்து கொள்வது அவசியம்.
4. நீங்கள் தண்ணீரை சேமித்து வைக்க பயன்படுத்தும் தொட்டிகள் மற்றும் டிரம்களை நேரடியாக சூரிய வெளிச்சம் படும் படி வைக்க வேண்டாம்.
5. தண்ணீரை சேமித்து வைக்கும் பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். பாட்டிலின் உள் பகுதி மற்றும் மூடிகளை நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.
6. தண்ணீரை குடித்தவுடன் பாட்டில்களை தவறாமல் முடி வைப்பது அவசியம். நீங்கள் பாட்டிலில் வாய் வைத்து குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், பிறரை பயன்படுத்தவிடாதீர்கள்.
7. திறந்த நிலையில் இருக்கும் தண்ணீரை பருகுவதை தவிர்ப்பது நல்லது.