முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்து அவருடைய சொந்தக் கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.
எனினும் அந்தக் கருத்தானது முன்னாள் ஜனாதிபதியின் கருத்தேயன்றி, கூட்டு எதிர்க்கட்சியின் பொதுவான கருத்து அல்ல.
கூட்டு எதிர்க் கட்சியில் நானும் உள்ளேன். கட்சி ரீதியில் விஜேதாசவுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.