இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘விக்கெட் கீப்பர் டோனி, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை இந்திய அணியில் நீடிக்க முடியும். எந்த ஒரு வீரராக இருந்தாலும் சரி, அணியில் நீடிக்க இது தான் தகுதியாக இருக்க வேண்டும்.
முன்பு பல சாதனைகளை படைத்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது முடிந்து போன விஷயம். அதை வைத்துக் கொண்டு அணியில் விரும்பும் வரை விளையாடிக்கொண்டிருக்க முடியாது. அதே சமயம் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்காது நமக்கு மிகப்பெரிய இழப்பாகும். தினேஷ் கார்த்திக்கை பொறுத்தவரை கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக ஆடியிருக்கிறார். அவரை அணியில் 2-வது விக்கெட் கீப்பராக வைத்து இருந்திருக்கலாம்’ என்றார்.