வருமான வரி சட்டமூல வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,
நடைமுறையில் உள்ள 2006ஆம் ஆண்டு 10ஆம் இலக்க தேசிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம் ஒன்று 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளது.
புதிய சட்டமூலத்தின் படி, வணக்க ஸ்தலங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கும் 14% வரி அறவிடப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த வருமான வரி சட்டமூல வரைவில் உள்ளடக்கட்டுள்ள விடயடங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகள். அது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளடக்கங்கள் அல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.