முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை புனர்வாழ்விற்கு உட்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது அதிகளவில் தமிழ் அரசியல் தலைவர்களே அதிக குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சிலரே அதிகளவில் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளிடம் விசாரணைகளை மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.