ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தால் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு பணிகளை ஐந்து நாளில் மீண்டும் தொடங்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் அளித்துள்ள பேட்டியில், ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக மேற்கொள்ளப்பட்டு வந்த யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தால் வெறும் ஐந்து நாளில் மீண்டும் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை தொடங்குவோம்.
ஆனால், இந்த சூழல் அமைவதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் அணுசக்தி ஒப்பந்த்தை எட்டுவதற்கு ஈரான் அரும்பாடுபட்டுள்ளது என அக்பர் கூறியுள்ளார்.
அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈரான் ஈடுப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய வல்லரசு நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை முன்னர் விதித்தன.
இதையடுத்து தங்களின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதிப்படுத்தியவுடன் பொருளாதார தடைகள் நிக்கப்பட்டன.
பின்னர் அந்நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை வல்லரசு நாடுகள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.