காரின் உள்ளே இருந்தபடி சிக்னலில் காத்திருந்த நடிகை இலியானாவிடம் ரசிகர்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகை இலியானா இரு தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் மும்பை நகர சாலையில் காருக்குள் அமர்ந்தவாறு சிக்னலில் காத்து கொண்டிருந்தார்.
அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் இலியானாவின் கார் கண்ணாடியை தட்டி தொல்லை கொடுத்துள்ளனர்.
இன்னொரு ரசிகர் காரின் மேலே ஏறி படுக்க முயன்றுள்ளார். பச்சை விளக்கு சிக்னலில் போடப்பட்டு கார் நகர தொடங்கிய பின்னரும் அவர்கள் இலியானாவின் காரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.
ரசிகர்களின் செயல் குறித்து டுவிட்டரில் இலியானா காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், மோசமான உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். நான் பிரபலம் தான், அதனால் என்னால சுதந்திரமாக இருக்க முடியாது என தெரியும்.
அதற்காக ஆண்கள் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக கடைசியில் நான் ஒரு பெண் என்பதே நிதர்சனம் என பதிவிட்டுள்ளார்.