பவளமல்லியை தேவலோக மரமான பாரிஜாத மலருடன் ஒப்பிட்டு கூறுவார்கள், இது இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்துவிடும், இந்தப்பூக்கள் இரவு முழுவதும் நறுமணம் வீசக்கூடியவை.
பவளமல்லி காற்றில் கலந்துள்ள தூசி மாசுக்களை அகற்றி, சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க தரும். உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது.
பவளமல்லியின் இலைகளை வெந்நீரில் போட்டு நன்றாக ஊறவைத்து வடிகட்டி, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் முதுகுவலி, காய்ச்சல் குணமாகும்.
இதன் இலைக்கொழுந்தை அரைத்து இஞ்சிச் சாற்றுடன் கலந்து குடித்து வந்தாலும் காய்ச்சல் சரியாகும், பவளமல்லி இலைச்சாற்றுடன் சிறிது உப்பு, தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும்.
வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பயன்படுகிறது, இதயம் வலுவற்ற குழந்தைகள் மற்றும் உடம்பில் ரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கு இது நல்ல மருந்து.
பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது, வியர்வையை தூண்டக்கூடியது, பல் ஈறுகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்த இதன் வேரை மென்று தின்றுவந்தால் தோல் நோய்கள் தீரும்.
விதையைப் பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் குழைத்துத் தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் வளரும்.
பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல் அனைத்தும் விலகிப்போகும், ஆறு துளசி இலைகளுடன், 6 மிளகை பொடித்து நீர்விட்டு தேனீராக்கி தினமும் குடிப்பதனால் ஆரம்ப கட்டத்திலேயே காய்ச்சலை தடுக்கலாம்.