கண் புருவம், உதடுகளை போல மூக்கு நமக்கு அழகினை கொடுகின்றது. முகத்தின் அழகினை குறைத்து காட்டுவதில் கரும்புள்ளிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக காணப்படும் போது மூக்கில் கரும்புள்ளிகள் தோன்றிவிடுகின்றது. வெளியே செல்லும் போது வாகனப்புகை காரணமாகவும் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடுகின்றது.
மூக்கிலுள்ள கரும்புள்ளிகளை எளிய வகையில் நீக்குவதற்கு வீட்டிலே இயற்கை முறையினை கையாளுவோம்.
பட்டை மற்றும் தேன்
1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடு நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதனால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறையும்.
ஒட்ஸ் மற்றும் தேன்
ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 2 முறை செய்வதனால் கரும்புள்ளிகள் காணமால் போய்விடும்.
கிரீன் டீ
கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.
உப்பு மற்றும் கடலை மாவு
1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
முல்தானி மெட்டி
முல்தானி மெட்டி முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.
தக்காளி
தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.
எலுமிச்சை மற்றும் தயிர்
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள்
கொத்தமல்லியுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, காயவைத்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையை, நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும், கரும்புள்ளிகள் நீங்கி விடும்.