பண்டைய காலங்களில் நாட்டை ஆளும் அரசர்களின் அந்தப்புரங்களில் ராணியுடன் சேர்ந்து பல்வேறு பெண்கள் இருப்பார்கள்.
மன்னர் ஆட்சியானாலும், பெரிய சக்ரவர்த்தியானாலும் எல்லா ஆட்சிகளிலுமே அந்தப்புரம் என்ற ஒன்று இருந்துள்ளது.
மன்னர் ஓய்வெடுப்பதற்கான ஒரு இடமாக இது இருந்துள்ளது. அந்தப்புர பெண்களும் மன்னரை மனம் குளிர மகிழ்விப்பார்கள்.
எத்தனை பெண்கள் மன்னரை மகிழ்வித்தாலும், மன்னருக்கு எப்போதும் சிறந்த பெண்ணாக அறிவிலும், அழகிலும் சரி அந்நாட்டின் ராணியே இருப்பார்.
அதிலும், தங்களுடைய அழகால் மன்னர்களை கட்டிப்போடுவதற்காக இவர்கள் தனிக்கவனம் செலுத்துவார்கள்.
தங்கள் அழகை மெருகேற்றிக்கொள்வதற்காக எப்போதும் பிரத்யேகம் வாய்ந்த பொருட்களை பயன்படுத்துவார்கள், இதன் காரணமாக ராணி மீது அரசன் எப்போதும் ஈர்ப்பு கொண்டிருப்பார்.
ராணிக்கள் பெரும்பாலும் தங்களுக்கு என்ற தனி வைத்தியர்கள் வைத்துக்கொள்வார்கள், அவர்கள் பரிந்துரையின் பேரிலேயே மருந்துகளை உட்கொள்வார்கள்.
ரோஜாப்பூ இதழ்களை தண்ணீரில் ஊறவிட்டு அந்த தண்ணீரில் தான் குளிப்பார்கள். அப்போது தான் அவர்களது சருமம் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.
பால் பவுடர், முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த Madeira (பீர்) கலவையை பயன்படுத்தினார். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவியது.
இவர்கள் குளிப்பதற்கு கழுதையின் பாலில் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை கலந்து குளித்துள்ளார்கள், இது இவர்களின் சரும முதிர்ச்சியில் இருந்து காப்பாற்றியுள்ளது.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த காரத்தில் இருப்பது போன்று ஜிம் கிடையாது, அதனால் நடனங்கள் ஆடி தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டார்கள்.
இது தவிர அரசர்களால் பரிசளிக்கப்படும் நகைகளே இவர்களது உடல்களில் ஜொலிக்கும்.