யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாயமாகிய இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.நாவான்துறையைச் சேர்ந்த குயின்சன் என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். மேலும் காணாமல் போன மற்றுமொரு நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காணாமல் போயிருந்த நிலையில், இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நால்வர் கடலுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கியிருந்ததாகவும், அவர்களில் இருவர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸார் சென்றுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விபத்தின் போது நீரில் மூழ்கியவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.