Loading...
இது ஒரு க்ரைம் என்ற திரில்லர் படத்தை விஜய் சேதுபதியும், காயத்ரியும் நெருக்கமாக நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியுள்ளது. தயாரிப்பாளருக்கு இருந்த கடும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது.
விஜய் சேதுபதி தனி அக்கறை எடுத்து படத்தை வெளியிட முயற்சித்தார். படத்தின் பெயரை புரியாத புதிர் என்று மாற்றினார்கள்.
Loading...
இந்தப் படத்தை நம்பி இருந்த காயத்ரி அடுத்த படத்தில் நடிக்காமல் இருந்தார். விஜய் சேதுபதி தான் நடிக்கும் படம் ஒன்றில் காயத்ரி நடிக்க வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய டீசர் மற்றும் டிரைலர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
Loading...