பாகிஸ்தானில் நிலக் கீழ் நீரில் ஆர்சனிக் நச்சு இரசாயனத்தின் அளவு மிகவும் அதிகமாகவுள்ளதாகவும் அதன் காரணமாக 60 மில்லியன் பேர் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டின் நீர் விநியோகம் தொடர்பான புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
அந்நாடெங்குமிருந்து எடுக்கப்பட்ட சுமார் 1,200 நிலக் கீழ் மாதிரிகள் இந்த ஆய்வுக்காக பரிசோதிக்கப்பட்டன.
மேற்படி ஆய்வு சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் கலாநிதி ஜோல் பொட்கொர்ஸ்கி தலைமையிலான ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்சனிக் நஞ்சானது உலகமெங்கும் பல்வேறு செறிவுகளில் காணப்படுகிறது. அந்த நச்சு இரசாயனம் பாறைகளிலிருந்தும் படிவுகளிலிருந்தும் நிலக் கீழ் நீரில் கலக்கிறது. உலகமெங்கும் சுமார் 150 மில்லி யன் பேர் ஆர்சனிக் நஞ்சு கலந்த நீரில் தங்கி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தா பனம் தெரிவிக்கிறது. சிறிய அளவான ஆர்சனிக் நீண்டகாலம் உடலில் சேரும் போது நுரையீரல் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்கள், இருதய குருதிக் குழாய்களிலான பிரச்சினை உள்ளடங்கலாக உயிராபத்தான உடல்நலப் பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது.