Loading...
சிறிலங்காவின் முதலாவது பெண் நீதியமைச்சராக தலதா அத்துகோரள சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று அமைச்சர் தலதா அத்துகோரள பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
Loading...
54வயதுடைய தலதா அத்துகோரள சிறிலங்காவின் நீதி அமைச்சராகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.
சட்டத்தரணியான தலதா அத்துகோரள, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.
Loading...