Loading...
வவுணதீவு – காஞ்சிரங்குடா, இரும்மண்டகுளம் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
புதையல் உள்ளதென சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை, கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...