பல வருடங்களாக குடித்து வரும் காபியை பற்றி நாம் நன்றாக புரிந்து வைத்துள்ளோம் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், எப்போது குடிக்க வேண்டும், எத்தனை தடவை குடிக்கலாம் போன்றவைகள். சொல்லப்போனால் அது ஒரு வகையான போதை வஸ்துவே. அதனால் அதனை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் தேவை.
நீங்கள் காலையில் தாமதமாக எழுந்திருப்பவர் என்றாலோ அல்லது காலை வேலையை தொடங்க ஆரம்பிக்கும் போது காபியை குடிக்க விரும்பினாலோ, உண்மையிலேயே நீங்கள் ஒரு அறிவு ஜீவி! பலரும் செய்வதை போல் காபியை நீங்கள் காலை 9 மணிக்கு முன் குடித்தால், நீங்கள் சில மறுபயிற்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்.
உடலின் உள் கடிகாரம் சர்க்கேடியன் இசைவு எனப்படும் உங்களுக்குள் இருக்கும் கடிகாரம் தான் காபியை அளப்பதற்கும் அதன் பக்க விளைவுகளுக்கும் மிக முக்கிய காரணியாக உள்ளது. இந்த கடிகாரம் தான் நாம் எப்போது விழித்திருக்கிறோம், எப்போது தூங்குகிறோம் என்பதை கார்டிசோல் என்ற ஹார்மோனை இரவும் பகலும் வெளிப்படுத்துவதன் மூலம் முடிவு செய்கிறது. நாம் எந்தளவிற்கு விழித்திருக்கிறோம் என்பதை இது தான் கட்டுப்படுத்தும். பொதுவாக காலை 8-9 மணி வரை, மதியம், 1 மணி, 5.30 மணி மற்றும் 6.30 மணிகளில் ஹார்மோனை சுரக்கும்.
உடல் ஏற்கனவே விழித்திருக்கும் போது காபி குடித்தால் என்னவாகும்? கார்டிசோல் சுரக்கப்படும் உச்ச நேரங்களில் காபி குடித்தால், போதையின் தாக்கத்தை குறைத்து, அதன் மீதான சகிப்புத் தன்மையை வளர்க்கும் என ஆய்வுகள் கண்டுப்பிடித்துள்ளது. அதனால் உச்ச நேரங்களில் காபி குடித்தால், அதன் தாக்கத்தை உணர, மதிய உணவின் போது இரண்டாவது அல்லது மூன்றாவது கப் காபியை நாடி செல்வீர்கள். இது உங்களுக்கு நல்லதல்ல.
எப்போது காபி குடிக்க வேண்டும்? காலை 9 மணி முதல் மதிய வேளைக்குள், மற்றும் மதியம் 1 மணி மற்றும் 5.30 மணிக்கு காபி குடிப்பதே மிகவும் சிறந்த நேரமாகும். சாயங்காலம் 6.30 மணிக்கு மேல் காபி குடிக்க பரிந்துரைக்கப்படுவதில்லை. அப்படிச் செய்தால் இரவு தூங்குவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும்.
சீக்கிரமாக எழுந்திருக்கையில் அல்லது தாமதமாக எழுந்திருக்கையில் என்ன நடக்கும்? உங்கள் கார்டிசோல் சூரிய ஒளிக்கு எதிர்வினையாற்றும் என சில ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது. இருப்பினும் நீங்கள் எழுந்திருக்கையில் உங்கள் கார்டிசோலின் அளவு 50% அதிகரிக்கும் என பெரும்பாலான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் நீங்கள் எழுந்த ஒரு மணிநேரம் கழித்து காபி குடிப்பது என்பது உங்களுக்கான சிறந்த பந்தயமாக அமையும்.
சிறந்த காபி தினம் நீங்கள் காலை 7 மணிக்கு எழுந்து, வேலைக்கு 8 மணிக்கெல்லாம் புறப்பட்டு விட்டால், காபி குடிப்பதற்கு 9 மணியே சிறந்த நேரமாகும். காலையில் முதல் நான்கு மணி நேரங்களுக்கு உங்கள் கார்டிசோலின் அளவுகள் அதிகமாக இருப்பதால், காலை எழுந்திருக்கையில் 50 சதவீதமும், இயல்பான உச்ச நேரமான காலை 8 மற்றும் 9 மணிக்கு மீதமும் இருக்கும். மதிய உணவிற்கு பிறகு, கொஞ்சம் குடித்தால் என்ன என தூண்டச் செய்யும். மதிய உணவிற்கு பிறகு 1 மணிக்கு காபி குடிப்பதும் சிறந்த நேரமாகும்.