இலங்கையில் இறக்குவானை, படேயாய பகுதியில் பள்ளியில் படித்து வரும் பெண் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று நடந்தாக போலீசார் கூறுகின்றனர். மேலும் இது சம்மந்தமாக பாடேயாய பகுதியில் 35 வயதுள்ள ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை வரும் 6-ம் தேதி வரை சிறைக்காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது சம்மந்தமாக பிரேத பரிசோதனைக்கு பின் போலீசார் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் இறந்ததால் தந்தையுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத போது துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு வித்தியா என்னும் பெண் இதே போன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.