பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் பல நாடுகளில் சில மணி நேரம் நேற்றைய தினம் செயலிழந்தது.
இதற்கான காரணத்தை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக் இணையதளம் சிறு தடங்கலில் உள்ளது. எங்கள் பொறியாளர்கள் சரி செய்யும் முயற்சியில் உள்ளதாகவும், விரைவில் சேவை தொடரும் என்று ட்வீட் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து பேஸ்புக் சிக்கல்கள் களையப்பட்டு, பேஸ்புக் வழக்கம்போல் செயல்பட்டது.
சமூக வலைதளங்களில் மிக முக்கிய இடம், பேஸ்புக்கிற்கு உண்டு. உலக அளவில் பேஸ்புக் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. பலரது நாள்கள் தொடங்குவதும் தூங்குவதும் பேஸ்புக்கில்தான்.
இப்படிப்பட்ட பேஸ்புக் இல்லை என்றால் எப்படி இருக்கும். ஒரு சில மணி நேரங்கள் தடைப்பட்டதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் பேஸ்புக் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.