முக்கனிகளுள் ஒன்று மாம்பழம் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை .இதில் மாம்பழம் பெரிதும் கவனிக்கத் தக்கவர் .
இலங்கையில் யாழ்ப்பாணம் என்றதும் கறுத்தக் கொழும்பானின் ஞாபகம்தான் வரும்.
இவர்தான் இங்கே மாம்பழங்களின் இராஜா !இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நாளெல்லாம் வாய் இனித்துக்கொண்டே இருக்கும் .
யாழ் மண்ணுக்குரிய ஒர் சுவையான பழத்துக்கு, ஏன் கறுத்தக் கொழும்பான் என்று பெயர் வைத்த்தார்கள் என்பது படைத்தவனுக்குத்தான் வெளிச்சம் !
மாம்பழ சீசன் இப்பொழுது பிரியாவிடை பெற்று விட்டது . அருந்தலாக ஒரு பழம் நூறு ரூபாய் என்று கறுத்தக் கொழும்பான் சந்தையில் கிடைக்கின்றது .
மல்கோவா மாம்பழம் கொஞ்சம் அதிகமாகவே கிடைக்கின்றது . ஆனால் சுவை என்னவோ அப்படி இப்படித்தான் !
மனிதர்களுக்கு ஏற்றிய ஊசியை இப்பொழுது மாம்பழங்களுக்கும் வாழைப்பழங்களுக்கும் ஏற்றத் தொடங்கி விட்டார்கள் . எது அசல் எது போலி என்று தெரியாமல் எல்லோரும் திணறுகிறார்கள் .
இது ஒருபுறம் இருக்க , யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை.
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது.. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்காகும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும்.
சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா? பயப்படாதீர்கள் . தாராளமா சாப்பிடலாம் .
தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்
இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்…. மாம்பழத்தில் உள்ள சில இரசாயணப் பொருட்கள் அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அப்பாடா மாம்பழத்துக்கு இத்தனை ஆற்றலா என்ற வியப்பு வருகிறதா ? ஆரம்பத்தில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன் . இது முக்கனிகளில் ஒன்று ! சாதாரண பழம் என்று கைவிட்டு விடலாமா ?