Loading...
சுசி கணேசன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘திருட்டுப்பயலே’. இதில் ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது.
Loading...
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் – சுசி கணேசன் கூட்டணியில் ‘திருட்டுப் பயலே’ படத்தின் இரண்டாம் உருவாகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும், அமலாபால் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதையடுத்து இப்படத்தின் பாடல்களை செப்டம்பர் 1ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை வித்தியாசமான முறையில் வெளியிடவும் முடிவு செய்துள்ளார்கள்.
Loading...