இந்தியாவில் தொழுநோய் சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவரை மருத்துவமனை ஊழியர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகர்கண்ட் மாநிலத்தில் உள்ள கோண்டா மருத்துவமனையில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இம்மருத்துவமனையில் 35 வயதான பெண் ஒருவர் தொழுநோயிற்காக கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெண் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி ஊழியர் ஒருவர் சென்றுள்ளார்.
நோயாளி உட்புறமாக கதவை தாழ் போட்டிருந்ததால் அவர் கதவை பலமாக தட்டியுள்ளார். சத்தத்தை கேட்ட பெண் கதவை திறந்துள்ளார்.
அப்போது, அவர் எதிர்பாராத விதமாக அவர் மீது பாய்ந்து ஆடைகளை கிழித்து கொடூரமாக கற்பழித்துள்ளார்.
இச்சம்பவம் நிகழ்ந்தபோது அருகில் பெண்ணின் 8 வயது மகள் இருந்துள்ளார். தனது தாயார் கற்பழிக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின்னர் காமவெறியை தீர்த்துக்கொண்ட அந்த ஊழியர் மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியான Santosh Kumar Srivastava பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.
மேலும், நோயாளியை கற்பழித்த ஊழியரின் பெயர் Jayantveer Pushkar எனவும் இச்சம்பவத்திற்கு பின்னர் அவரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஊழியரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்