போதைப் பொருள் அடங்கிய பொதிகளை விழுங்கி நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து வந்த 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, குறித்த நபர் போதைப் பொருள் அடங்கிய பொதிகளை விழுங்கி அவற்றை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தமை அம்பலமாகியுள்ளது.
குறித்த பாகிஸ்தானியர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், விழுங்கிய 21 போதைப் பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானியரின் வயிற்றில் மேலும் போதைப் பொருள் பொதிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் காரணமாக பொலிஸ் காவலுடன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.