Loading...
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, தொழிலுக்காகவும் வேறு சட்டபூர்வ அலுவல்களுக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் வாக்காளர் இடாப்புகளில் தங்களது பெயர்களைப் பதிவுசெய்து கொள்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Loading...
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்களது பெயர்களை இதுவரை பதிவு செய்துகொள்ளாதவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதிவரை அதைச் செய்து கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...