அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம் என்றும் தொடர்ந்து போராடுங்கள் எனவும் தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் ரசிகர் திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் உரைநிகழ்த்தினர். அப்போது பேசிய அவர் அரசியலில் அமைதியாக இருப்பது அவமானம் என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து விழித்திருந்து நியாயமான விடையங்களுக்காக போராடுங்கள் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் தர்காப்பு முக்கியமல்ல தன்மானம் தான் முக்கிய என தெரிவித்து இருந்தார்.
இந்த கருத்து நடிகர் ரஜினியை மையமாக வைத்து தான் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்ததாக சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம் என்று அவர் கூறியுள்ளது ரஜினியை மையப்படுத்திதானா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழக அரசியல் குறித்து தனது கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை முந்திவிடார் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் இந்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக தமிழக அமைச்சர்களை விமர்சித்து அவர் வெளியிட்டு வரும் கருத்து அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.