Loading...
கருக்கலைப்பு என்பது மனித உரிமை என்ற பகுதிக்குள் அடங்காது என கொழும்பின் பேராயரான கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு என்பது மனித உரிமை என சிலர் கூறுகின்றனர்.
எனினும், கொலை செய்வது என்பது எவ்வாறு மனித உரிமைக்குள் அடங்கும் என கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading...
மனித உரிமைகள் என்பது உயிர்களை காப்பாற்றுவதே அன்றி உயிர்களை பறிக்கும் செயற்பாடல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்த கருத்துக்களை வெளியிட்ட அவர், குழந்தைகள் கடவுள்களின் குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள்.
எனவே, கருக்கலைப்பு என்பதை பெற்றோர் தடுத்திட வேண்டும் என்றும் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading...